Ilaiyaraaja

Follow

மே 14.. ஹிட்டு.. ஹிட்டு.. கொஞ்சம் ரீவைண்ட்..

மே 14.. ஹிட்டு.. ஹிட்டு.. கொஞ்சம் ரீவைண்ட்..

ஏற்கனவே நாம் போட்டஒரு பதிவை நினைவுபடுத்தி 43 வருஷங்களுக்கு முன்பு இதே நாளில்தான் இளையராஜா இசையமைப்பாளராய் ஆன அன்னக்கிளி வெளிவந்தது என நண்பர் சொன்னார்.

இளையராஜா அங்கீகாரம் பெறுவதற்காக உண்மையி லேயே கடுமையாக போராடினார் என்றே சொல்ல லாம்.. அருமையாக டியூன் போட்டிருப்பார். படத்தில் அந்த பாடலை கர்ணகொடூரமாக கொலை செய்திருப்பார்கள்.

1977ல் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்றொரு படம். ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூழைன்னு. ஒரு பாட்டு இளையராஜா பிரிச்சி மேய்ஞ்சிருப்பாரு.

கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட

பி.சுசீலாகிட்ட இருந்த வாய்ஸ் பெருவெள்ளத்தை வாங்கி அப்படியே முழுவேகத்துல ஓட விடறமாதிரி டியூன் போட்டிருப்பாரு..

ஆனா, படத்துல அந்த பாட்டை பார்த்தா, காலையில் நெய்பொங்கல் சாப்பிட்டு ஜீரணம் ஆவாதவங்க லைட்டா எக்சைஸ் கம் உலாத்தல் பண்ணுவாங்களே அந்த மாதிரி நாயகிகூட சிவகுமார் எக்ஸ்சைசும் யோகாவையும் கலந்து செஞ்சிகிட்டு இருப்பாரு.., இப்படி நிறைய கொடுமையை இளையராஜா சந்திச்சாரு.

இளையராஜாவை அவர் இசையமைச்ச படத்துல வெச்சே செமையா செஞ்சாங்கன்ற கொடுமையெல் லாம் உண்டு. அவள் அப்படித்தான்.. ஸ்ரீபிரியா கமல் ரஜினி நடிச்ச செம கிளாசிக் மூவி. ரசனை உள்ள ஒவ்வொருத்தனும் கட்டாயம் பாக்கவேண்டிய படம்.

அந்த படத்துல ஒருசீன்வரும், ஒரு பெண் கமலிடம் கேட்பார்.. ஒ. மச்சானை பார்த்தீங்களா பாடினாங்களே அந்த எஸ்.ஜானகியான்னு?

அதுக்கு கமல் சொல்வார். இல்லைங்க எனக்கு சிங்கார வேலனே வா வா ஜானகியைத்தான் தெரியும்னு. அதாவது இளையராஜாவின் பட்டைய கிளப்புன கிராமத்து பாடலான மச்சானை பார்த்தீங்களா பாடல் கிளாசிக் ரகத்துல வராது என்று ஒரு ஊமைக்குத்து.

போகட்டும் பழைய பதிவை படிச்சிட்டு கிளம்புங்க..

1976ல் இதே நாளில்தான் வெளியானது அன்னக்கிளி படம்.. ஜி.ராமநாதன், கேவிஎம் எம்எஸ்வி போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் புதிய முகம் ஒன்று இந்த படத்தின் மூலம் சேரப்போகிறது என்பது பெரும்பாலும் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

கறுப்பு வெள்ளைப்படமான அன்னக்கிளியில், மச்சானை பார்த்தீங்களா.. என்ற பாடல் அப்படியொரு சூப்பர் டூப்பர் ஹிட்.. வெயிட்டான ரோல்களில் அப்போது வெளுத்துவாங்கிய சுஜாதாவின் நடிப்பை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தன இந்த படத்தின் வித்தியாசமான பாடல்கள்..

அறிமுகமான படத்திலேயே அசத்தியதால் யார்யா இந்த இளையராஜான்னு கேட்காமலிருந்தவர்கள் கொஞ்சம்பேரே.. முதல் படத்தில் அசத்திவிட்டு அடுத்தடுத்து மொக்கையாகிறவர்கள் நிறைய பேரு..

ஆனால் இளையராஜாவின் ஆரம்பம் அப்படியொரு பட்டைய கிளப்பிய ரகம்.. நோ டக் அவுட்.. தனது அடுத்த ஒவ்வொரு படத்திலும் ஒரு தேசிய கீதத்தை கொடுத்து பாட்டுக்காகவே ரசிகர்களை வரவழைத்தவர்

நான் பேசவந்தேன் சொல்லத்தான் வார்த்தை யில்லை..,

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்..

கண்ணன் ஒரு கைக்குழந்தை

அந்தப்புரத்தில் ஒரு மகராணி..

சுராங்கனி, சுராங்கனி..

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
மேற்படி பாடல்கள் இடம்பெற்ற படங்களெல்லாம் அவ்வளவு பிரபலமில்லாதவை. ஆனால் அப்போது திரும்பத்திரும்ப ரேடியோக்களில் இவற்றின் பெயர் கேட்கும். காரணம் ஒன்லி இளையராஜா..

16 வயதினிலே, தியாகம், சிட்டுக்குருவி, இளமை ஊஞ்சலாடுகிறது, முள்ளும் மலரும், பிரியா, கல்யாண ராமன், ரோஜாப்பூ ரவிக்கைக்காரி என எழுபதுகளை துவம்சம் செய்துவிட்டு ஜானி, முரட்டுக்காளை என எண்பதுகளில் அடுத்த ரவுண்டுக்குள் நுழைந்தவர் இசையின் சகலகலா வல்லவன் இளையராஜா..

1980கள் என்றாலே முழுக்க முழுக்க இவரின் இசையே.. அதன்பிறகு ஆயிரம் படங்களை தாண்டி இசைஞானி பட்டத்தை சுமக்கும் அளவுக்கு போனது உலகமறிந்த விஷயம்..

இதில் கொடுமை என்னவென்றால் அன்னக்கிளிக்கு பட விமர்சனம் எழுதிய ஆனந்தவிகடன், இசையை பற்றியோ, இளையராஜா பற்றியோ ஒரு வரிகூட குறிப்பிடவேயில்லை என்பதுதான்.. (முதல் கமெண்ட்டில் அந்த விமர்சன போட்டோ)

இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களின் வெறிபிடிச்ச ரசிகன் என்ற
-ஏழுமலை வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up