Mayuran

Follow
5

Average

Mayuran Review

மயூரன்- விமர்சனம்

மீண்டும் நட்புன்னா என்னானு தெரியுமா டைப்ல ஒரு கதை. அதுதான மயூரன். நூலிலை கதையை வைத்து ரசிகனுக்கு மூலிகை விருந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். முடியும் வரை காத்திருந்தும் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என்றாலும் பேசண்ட் பிழைச்சுக்கிட்டார் என்ற வகையில் படம் தருவது ஆறுதல் படுத்துகிறது

மாயமான நண்பனைத் தேடுவதில் துவங்கிய பயணம், இடையில் காதல், காமெடி என சில இடங்களில் சறுக்கினாலும் முடிவில் நேர்கோட்டில் போய் நின்று ஆசுவாசப் படுத்துகிறது. நாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச் தடம் புரளவில்லை. இந்த ஹீரோயின் கேரக்டரை இன்னும் நாலு பக்கத்துக்கு எழுதியிருக்கலாம். பொண்ணு வாரதும் தெரியல..போறதும் தெரியல. லேசா கவனிச்சா ..பிடிக்காதவங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாதிரியே ரியாக்ட் பண்ணுது.

காமெடி என்ற பெயரில் அமுதவாணன் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு வாழ்த்துகள். அவ்ளோதான். ஒளிப்பதிவாளர் தன் வேலையை கச்சிதமா செய்துள்ள மாதிரி இசை அமைப்பாளரும் செஞ்சிருக்கலாம். வேறமாதிரி செஞ்சிட்டாப்ல.

படத்தில் சேகுவாரா என்பது நாயகனின் பெயர். படத்தில் அவர் சமூகத்திற்காக எங்கேயும் பொங்கவே இல்லை. இருந்தாலும் பராவாயில்லை. முடிவில் தீயவரை சாதுர்யமாக கருவறுப்பதில் நிறைவடையச் செய்துவிடுகிறார்.

பட்ஜெட்டில் சின்னபடம் என்றாலும் சப்ஜெக்டில் கொஞ்சமேனும் மெனக்கெடல் தெரிகிறது. அதுதான் நம்மை மயூரனை நோக்கி அழைக்கிறது

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up