மீண்டும் இணையும் ”பிதாமகன்கள்”

மீண்டும் இணையும் ”பிதாமகன்கள்”

நடிகர் சூர்யாவின் அடையாளத்தை தமிழ் சினிமாவில் அடியோடு மாற்றிய படம் என்றால் அது நந்தா தான். அதனையடுத்து பிதாமகனில் அவர் நடிப்பில் காட்டிய மற்றொரு பரிமாணம் சூர்யா ஒரு நடிப்பு ராட்சசன் என்று சொல்லும் இடத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த இரண்டு படத்திலும் சூர்யாவின் நடிப்பு மிளிர காரணம் இயக்குநர் பாலா என்றால் அது மிகையாகாது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இந்த இருவரும் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. ‘வர்மா’ படத்தினால் உண்டான மனக்கசப்பில் உளன்று வரும் பாலாவும், மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்கப் போராடி வரும் சூர்யாவும் மீண்டும் இணைய இருக்கும் இப்படத்தின் கதையைக் கேட்டு சூர்யா மிரண்டு போய் இருப்பதாக தெரிகிறது. தன் முழு உழைப்பையும் கொட்டி, பாலா இப்படத்தை இயக்கவிருக்கிறார் என்று நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல எழுத்தாளர் ஒருவர் வசனம் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கலாம் என்று தெரிகிறது. மேலும் தற்போது இப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தில் பாலா இறங்கி இருப்பதால், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தினைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up