Mei

Follow
5.5

Average

Mei Review

மெய்- விமர்சனம்

நாட்டில் நடக்கும் க்ரைம்களில் மிக ஆபத்தான க்ரைம் மருத்துவ க்ரைம் தான். அந்தக்களத்தைத் தொட்ட விதத்தில் கவனம் ஈர்த்து இருக்கிறார் மெய் படத்தின் இயக்குநர் SA பாஸ்கரன். திரில்லர் ட்ராமா வகைப்படங்களில் திரைக்கதை மிக முக்கியம். அதிலும் ஓரளவு தேறி இருக்கிறார் இயக்குநர்.

வெளிநாட்டில் இருந்து வரும் நிக்கி சுந்தரம் ஒரு டாக்டர். சென்னையில் உடல் உறுப்பிற்காக கொலை செய்யும் மருத்துவக் கும்பலை தன் நண்பனின் மரணம் மூலமாக கண்டு பிடிக்கிறார். அதன்பின் அவர் சந்திக்கும் இன்னல்கள் தான் மெய்.

ஹீரோ நிக்கி எண்டெர்டெயின்மெண்ட் செய்யும் ஹீரோவாக இல்லை. பொய் சொல்லாத அதிகம் நடிக்காத ஹீரோவாகவே இருக்கிறார். அவரின் கேரக்டரேசனை உள்வாங்கி நடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ.
படத்தின் விறுவிறுப்புக்கு தீனி போடுவது கிஷோரின் கேரக்டர் தான். இறுதியில் அந்தக் கேரக்டர் மீது வரும் ட்விஸ்ட்டும் திரைக்கதையின் பலம். ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரும் தில்லான டிசைன். விஜய் டிவி தங்கதுரை சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

படத்தின் இசை ஸ்டண்ட் காட்சிகளில் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. ஒளிப்பதிவும் படத்தின் மேக்கிங்கும் கூட அசாத்தியம். முழுக்க முழுக்க ஹீரோ சுமக்க வேண்டிய படமிது. அதற்கான ட்ரைனிங்கை ஹீரோவுக்கு கொடுத்திருக்கலாம். இயக்குநர் புத்திசாலித்தனமான ஸ்கிரீன் ப்ளே பின்பாதியில் அட போட வைக்கிறது.

மருத்துவத் துறையில் உள்ள தீயவர்களை அடையாளம் காட்டியதைப் போலவே சில நல்லவர்களையும் சேர்த்துச் சொல்லி இருக்கலாம். ஏன்னா படம் முடிந்ததும் எந்த பெரிய டாக்டரைப் பார்த்தாலும் பகீர்னு தான் இருக்கும். படத்தில் வர்ற மூன்று டாக்டரும் அவ்ளோ மோசமானவியங்களா இருக்காங்க.

ஹீரோ நிக்கி டிவி எஸ் குழுமத்தைச் சேர்ந்தவரின் வாரிசு. அவரை ஹீரோவாக ப்ரோமோட் பண்ணவே இப்படம் எடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள். படத்திற்கு அதுவே நெகட்டிவாக அமைந்தது தான் சோகம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கை வீசிக்கொண்டு போனால் மெய் ஓரளவு ஈர்க்கும்

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up