Monster

Follow
6.5

Fair

6.2

User Avg

Monster Review

மான்ஸ்டர் – விமர்சனம்

மூக்குல சளித்தொல்லை வந்தா மூச்சைப் பிடிச்சி சமாளிச்சுடலாம். ஆனா வீட்டுல எலித்தொல்லை வந்தா…சமாளிக்க என்ன பாட்டையெல்லாம் பட வேண்டிய இருக்கு என்பது தான் மான்ஸ்டரின் கதை.

உடம்புக்கேத்த சட்டை மாதிரி கேரக்டருக்கு பக்கா பொருத்தம் எஸ்.ஜே சூர்யா. முதல்ல பிள்ளைக்குட்டியோட படம் பார்க்க வர்ற மாதிரி ஒரு உருப்படியான படத்தில் நடித்ததிற்கு மெர்சல் வணக்கம். பிரியாபவானி சங்கருக்கு கலகலன்னு ஒரு முகம். பளபளென்னு மின்னுற மாதிரி நடிப்பிலயும் பின்னிருக்காங்க. கருணாகரன் அங்கங்கே அடிக்கிற பன்ச்க்கு லைட் லைட்டா சிரிப்பு வெடிக்குது. இவிய்ங்க எல்லோரையும் தாண்டி அசால்டுப் பண்ணிருக்கார் எலியார். வளையத்திற்குள்ள மாட்டிக்கிட்டு நீருக்குள்ள முங்கி எழும்போது எலி கொடுக்குற மரண ரியாக்‌ஷன் இருக்கே…அடேயப்பா நிஜமான மரணமாஸ் அது.

சொந்த வீடு வாங்குனா தான் கல்யாணம் முடியும் என்ற மேட்டர் மட்டும் தான் ஹீரோ கல்யாணத்திற்கு தடை என்ற லாஜிக் தான் உறுத்துது. அப்படி ஒரு உண்மை இருக்குன்னா இன்னைக்கு சென்னையில கொள்ளைப் பேருக்கு கல்யாணமே முடிஞ்சிருக்காது. மற்றபடி சீராக படம் பயணிப்பதால் எங்குமே போர் அடிக்கவே இல்லை. சி.எஸ்.கே வேகம் இல்லாவிட்டாலும் க்ளைமாக்ஸ் டைமில் மும்பை போல கப் அடித்து கெத்துக்காட்டி விடுகிறார்கள்.

ஒளிப்பதிவு பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு இரண்டு வரம். பெரியளவுல சிஜி வேலைகள் இல்லை என்பது ஆறுதல். நிறையபேரு எலியை சிஜின்னு !! (நீங்க சொல்லலன்னா நாங்களும் அப்படித்தான் நினைச்சிருப்போம்)

துளி ஆபாசம் இல்லாது குடும்ப சினிமாவாக எடுத்ததிற்கு இயக்குநருக்கு ஒரு மாஸ் பூங்கொத்து.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up