Sivakarthikeyan

Follow

Mr லோக்கல் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 காரணங்கள்

Mr லோக்கல் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 காரணங்கள்

சிவகார்த்திகேயனுக்கு காமெடி ஜானரில் படம் நடிப்பது எல்லாம் அல்வா சாப்பிடுவது போல. இருந்தும் மிஸ்டர் லோக்கல் படத்தை நாம் பார்ப்பதற்கு 5 காரணங்கள் இருக்கின்றன பார்த்துருவோமா?

பாயிண்ட்1:
இயக்குநர் ராஜேஷ் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டயலாக் ரைட்டர். “எங்களுக்கு ஆடலும் பாடலும் போட்டே ஆகணும்” என்று சிவா பேசியபோது தியேட்டரே அல்லு சில்லானாது. அதனால் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கலில் பேசும் டயலாக்குகளும் சில்லறையை சிதறவிடும் என்று நம்பலாம்

பாயிண்ட் 2: சிவகார்த்திகேயன் ராஜேஷ் காம்போ. ஆர்யா, ஜீவாவிற்கு முக்கியமான நேரத்தில் பெரிய வெற்றியை கொடுத்தவர் ராஜேஷ். சிலபல அடிகளுக்குப் பின் அவர் சிவாவோடு வந்திருப்பதால் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

பாயிண்ட் 3: ஞானவேல்ராஜா ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் அது நிச்சயம் மினிமம் கியாரண்டி படமாக இருக்கும் என்பதில் மாற்றமே இல்லை. அதனால் எந்த வகையிலும் கலகலப்பு இல்லாத படமாக இது இருக்காது என்பதற்கு ஞானவேல்ராஜா சாட்சி.

பாயிண்ட் 4: நயன்தாரா. தனி ஆவர்த்தனம் செய்து காலை 5 மணி சோ வரை முன்னேறியவர் நயன்தாரா. அவர் இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். வேலைக்காரன் படத்தில் இருவரின் கூட்டணி படத்தில் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்ற குறையை இப்படம் போக்கும் என்கிறார்கள். நயன்தாரா என்ற ஒரு வார்த்தை போதாதா இப்படத்தை எதிர்நோக்க.

பாயிண்ட் 5:
சிவகார்த்திகேயன் சீமராஜா படத்திற்குப் பின் கனா படத்தில் சீரியஸ் ரோலில் நடித்தார். இப்படம் அதிலிருந்து டோட்டலாக வேறு ஜானர். சிவகார்த்திகேயனை இப்படி பக்கா லோக்கலாக பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டதால் 17-ம் தேதி காலைக் காட்சிக்காக இப்பவே வெயிட்டிங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up