முள்ளும் மலரும்…அது ஒரு மேஜிக்..

முள்ளும் மலரும்…அது ஒரு மேஜிக்..

பொதுவாக படங்களில் சில முக்கிய பாத்திரங்கள் தங்கள் நிலைப்பாடுகளை இடையிலேயோ, கடைசியிலேயோ மாற்றிக்கொள்ளும்..ஆனால் இங்குதான் முள்ளும் மலரும் வித்தியாசப்பட்டு போய் நிற்கும்

விஞ்ச் ஆப்ரேட்டர் காளி என்கிற ரஜினிக்கு இஞ்சினியர் குமரன் என்கிற சரத்பாபுவை பிடிக்கவே பிடிக்காது

காளி தங்கையான வள்ளி என்கிற ஷோபாவுக்கு இஞ்சினியர் குமரனை பிடிக்கும் ஆனால்.காளியின் சம்மதம் இல்லாமல் கல்யாணம் இல்லை என்பதில் பிடிவாதமாக இருப்பார்.

குமரனோ, வள்ளியை மணந்தே தீருவதில் உறுதிபாய் இருப்பார். காளியின் வெறுப்புக்காக பயந்து வள்ளியைைவிட்டு வேறு திசையில் போகமாட்டார்.

நல்ல எஞ்சினியர் மாப்பிள்ளையை வெறுக்கும் கணவன் போக்கு பிடிக்காத காளியின் மனைவி மங்கா, தன் வாழ்க்கையே பறிபோனாலும் வள்ளியையும் குமரனையும் சேர்த்து வைப்பதில்தான் திடமாய் இருப்பார்..

கிளைமாக்சில்,, வள்ளியை குமரன் கரம்பிடிப்பார்.
உற்றுநோக்கினால், நான்கு பாத்திரங்களும் கடைசி வரை தங்களை மாற்றிக்கொள்ளவே கொள்ளாது.

கணவன் பிடிவாதத்திற்கு அஞ்சி மங்கா, முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார், அண்ணனை மீறி தங்கை காதலினிடம் மாங்கல்யம் பெற மாட்டார். திருமணத்திற்கு சம்மதித்தாலும் காளி, அதன்பிறகும் குமரனை தனக்கு பிடிக்கவில்லை என்றுதான் சொல்வார்.

இப்பவும் சொல்றேன், எனக்கு உங்களை பிடிக்கலை சார்.. ஆனா என் தங்கச்சிக்கு உங்கள பிடிக்குது சார்
என ஒற்றைக்கையுடன் வாழும் அந்த காளி பாத்திர சொல்ல, படம் முடியும்..

படத்தில் எல்லோரையும்விட வெற்றிபெறுவது, தங்கை மீது அண்ணன் வைத்திருக்கும் நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை இன்னும் வலுவாக்கி திருப்பி கொடுத்தே, தான் விரும்பியதை பெற்று செல்வாள் தங்கை..

இந்த உயர்ந்த தத்துவத்தை புரியாமல்தான், பெற்றோரின் நம்பிக்கையை சிதைத்து அவசரப்பட்டு வாழ்க்கையை சிக்கிலாக்கிக்கொள்கிறார்கள் இந்த காலத்து ஒரு தரப்பு பெண்கள்..

முள்ளும் மலரும் மட்டுமல்ல இயக்குநர் மகேந்திரனின் பல படைப்புகளும் அதி நுட்பம் வாய்ந்தவை.

இயக்குநராவதற்கு முன்பே அவர் கதை, வசனகர்த்தாவாக இருந்தபோதும் கதைக்கேற்ப அவரது வசனங்கள் தனித்துவத்தை அருமையாக காட்டும்..

”கொள்ளை அடிப்பதைவிட குடும்பம் நடத்துறது ரொம்ப ஆபத்தான விஷயம்” ”’எனறு எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு கொள்ளைக்காரனுக்கு அவரால்தான் இப்படியெல்லாம் எழுதமுடியும்.

-ஏழுமலை வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up