Munirathna Kurukshetra

Follow
6

Fair

4.5

User Avg

Munirathna Kurukshetra Review

குருக்ஷேத்திரம்- விமர்சனம்

மண்ணாசையால் விளைந்த மகாபாரதப் போரைப் பற்றிய கதைகள் படங்களாக சீரியலாக நிறைய வந்துள்ளது. அதில் ஒன்று தான் கன்னடத்தில் வெளியான குருக்ஷேத்திரம். துரியோதனன் கேரக்டரை முதன்மையாக்கி இயக்குநர் நாகண்ணா இயக்கி இருக்கிறார். தர்சன் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணன் கேரக்டரில் நமது அர்ஜுன் நடித்துள்ளார்.

நிலம் கேட்கும் பாண்டவர்களுக்கு எதிராக துரியோதனன் வெகுண்டெழுவதும், கர்ணனை குலம் பார்க்காது துரியோதனன் ஆரத்தழுவிக் கொள்வதும் தான் படத்தின் அடிநாதம்.

நிறைய காட்சிகளை வெறும் வசனங்கள் மூலமாகவே கடத்தி இருக்கிறார் இயக்குநர். சில காட்சிகளில் அது பெரும் சலிப்பைத் தருகிறது. சிஜி எபெக்டும் பெரிய ஆச்சர்யத்தை தரவில்லை. ஆனால் அந்தப் போர்க்களக் காட்சியும் அதில் அபிமன்யு கேரக்டரில் வரும் இளைஞன் போடும் சண்டைக்காட்சியும் பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவும் தரம். எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி கூடுதலான காட்சிகளை வெட்டி இருக்கலாம்.

அர்ஜுனுக்கு இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது முக்கியமான திருப்பம்.

கன்னட மொழியில் இருந்து வசனங்களை தமிழ்ப்படுத்தி இருப்பதால் வசனங்களில் போதிய உயிரோட்டம் இல்லை.

பெண்களை இழிவுப்படுத்தும் சில வசனங்களும் படத்தில் இருக்கின்றன. உதாரணத்திற்கு துரியோதனன் தாயைப் பற்றியும், பாண்டவர்களின் தாயைப் பற்றியும் அவர்கள் மாறிமாறிப் பேசும் வசனங்கள். இவ்வசனங்கள் எல்லாம் மகாபாரதத்தில் இருந்தாலுமே படத்தில் அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

சிலசில சலசலப்பு இருந்தாலும் விஷுவல் அனுபவத்தை ஓரளவு கொண்டாட இந்தக் குருக்ஷேத்திரம் உதவும்.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up