நடிகை சாயிஷாவின் சரக்குப் பார்ட்டி

நடிகை சாயிஷாவின் சரக்குப் பார்ட்டி

தமிழ் சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நாயகி என்றால் அது வனமகள் படத்தின் நாயகி “சாயிஷா ஷேகல்” தான். வனமகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் “ஜூங்கா”, நடிகர் கார்த்தியுடன் “கடைக்குட்டி சிங்கம்” ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்தார். இதைத் தொடர்ந்து பிற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை வேகமாக கைப்பற்றி வருகிறார். இவரது வளர்ச்சியை பிற வளரும் நாயகிகள் சற்றே பொறாமையுடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தன் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்த சாயிஷா அதற்காக அடையாரின் புறநகர் பகுதியில் ஒரு நள்ளிரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இப்பார்ட்டியில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான நாயகிகள் மற்றும் தோழிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தன் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் இணையதள நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தப் பார்ட்டி விடிய விடிய நடந்ததாம். பார்ட்டி முழுக்க சரக்கு சர்வ தாராளமாக பரிமாறப்பட்டிருக்கிறது. பலரும் அதிகாலையில் போதையுடன் தள்ளாடியபடியே தான் வெளியேறியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up