Lakshmi

Follow
4

Poor

5.5

User Avg

”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”

”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”

நடனம் என்பது ஆடுபவர்களுக்கு மட்டுமில்லாமல் நடனத்தை பார்ப்பவர்களுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சி ஆற்றலைக் கொடுக்கும் கலை ஆகும். சில வருடங்களுக்கு முன் நடனத்தை மையமாக வைத்து நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘ஏபிசிடி’. அப்படத்திற்கு பிறகு வேற எந்த படமும் வெளியாகவில்லை.

இப்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் நடனத்தை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லக்‌ஷ்மி’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி டித்யா, கருணாகரன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது, “நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம்” இதில் அருமையான அழகான நடிப்பை வெளிபடுத்தும் பேபி டித்யா சென்சேஷனல் சிஷ்யையாக நடித்து படக்குழுவின் பாராட்டையும் பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் மிகவும் சவலான இசையை பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துள்ளார் சாம் சி எஸ். நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும் ஆண்டனியின் படத்தொகுப்பும் கூடுதல் பக்க பலமாக அமைந்துள்ளது. நடனத்தை சர்வதேச தரத்துக்கு ஆடும் இந்தியாவின் ஒரே நபர் பிரபுதேவா மட்டுமே. நடனத்திற்கு நிகர் நடனப்புயல் மட்டுமே என்று சொல்வதற்கு பெருமையாக உள்ளது என்றார் இயக்குநர் விஜய். இப்படத்தை பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி நல்லப்பா மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை விரைவில் மிகப் பெரிய நடன திருவிழாவாக திரைக்கு வரும் என்றார் இயக்குநர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up