Anushka Shetty

Follow
5.5

User Avg

நடிகை அனுஷ்கா எழுதிய புத்தகம்

நடிகை அனுஷ்கா எழுதிய புத்தகம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கின்ற படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாரா மற்றும் த்ரிஷா இவர்களுக்கெல்லாம் சீனியர் அனுஷ்கா. அனுஷ்காவை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் தமிழ் மற்றும் தெலுங்குப்படவுலகில் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக வெளியாகின. அதில் பெரும்பாலானவை வரலாற்றுப்படங்களாக இருந்ததும் அனுஷ்காவின் தனிச் சிறப்பு. இப்படி மிகச் சீராக சென்று கொண்டிருந்த அனுஷ்காவின் திரைப்பயணம் ‘இஞ்சி இடுப்பழகி” படத்திற்குப் பின்னர் தடுமாறத் தொடங்கியது. நாயகர்களைப் போல் தன் உடல் எடையை கூட்டிக் குறைப்பதில் படு கில்லாடியாக திகழ்ந்த அவர், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கூட்டிய தன் எடையை குறைக்கமுடியாமல் தவிக்கத் தொடங்கினார். எந்தவிதமான சிகிச்சையும் பயனளிக்காத நிலையில் அமெரிக்க பிட்னஸ் நியுணர் லூக்கு குவாண்டினகோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சை எடுக்கச் சென்றார். பின்னர் வெறும் 62 நாட்களில் பழைய அனுஷ்காவாக திரும்பினார். தற்போது அமெரிக்காவில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் தனது அனுபவங்கள் குறித்து “தி மேஜிக் வெயிட் லாஸ் பில்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு நடிகை ஷில்பா ஷெட்டி அணிந்துரை எழுதியிருக்கிறார். இப்புத்தக வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up