Tamil Movie Ads News and Videos Portal

‘சூரரைப் போற்று” பைலட் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு இல்லை – சுதா

‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்தின் கதை முதன்முதலில் விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு என்ற தகவல் மீடியாவில் கசிந்தது.

ஆனால் இப்படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு இல்லை; அவர் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்கள் இப்படத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. வெறும் 6 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கும் ஒரு சாதாரண ராணுவ வீரர் எப்படி ஏர்லைன்ஸ் நிறுவனராக மாறினார் என்பதே இப்படத்தின் கதை என்று விளக்கம் அளித்திருக்கிறார் சுதா கொங்கரா.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline