Tamil Movie Ads News and Videos Portal

ஓ மை கடவுளே!! டிரைலர் செய்த சாதனை!

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது வெளியான டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை Youtube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது.


டிரெய்லரின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் படத்தின் கதையோட்டத்திற்கு ரசிகர்களை மிகச்சரியாக தயார்படுத்தும்படி அமைந்துள்ளதே ஆகும். முதலில் டிரெய்லர் படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. முடிவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி பாத்திரம் அசோக் செல்வனிடம் “கோல்டன் டிக்கெட்” ஒன்றை தருவதாக அமைந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline