Suriya

Follow

ஒரு காரியத்தை துவங்குவது பெரிய விசயமில்லை- நடிகர் சூர்யா

ஒரு காரியத்தை துவங்குவது பெரிய விசயமில்லை- நடிகர் சூர்யா

நடிகர் சிவக்குமாரின் கல்வி அறக்கட்டளை நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அப்பா சிவக்குமார் இரு மகன்கள் சூர்யா கார்த்தி மூவருமே கல்வி உதவி விசயத்தில் தாராளமாகச் செலவு செய்யக்கூடியவர்கள். இதை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் உறுதிப்படுத்தி வருகிறார்கள். இன்று சிவக்குமாரின் அறக்கட்டளை நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில்
நடிகர் சூர்யா பேசியதாவது,
“ஒரு காரியத்தை துவங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவது தான் பெரிய விஷயம். அப்பாவிடம், நாங்கள் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் அது. ஆரம்பிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிப்பார். ஆரம்பித்து விட்டால், அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார். 40 வருடமாக நடக்கும் இந்த நிகழ்வு இதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லோரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வு தான் இது. அகரம் பவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 3000 பேராக உயர்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு இது சாத்தியம் இல்லை. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தின் தரம் வாய்ந்த முக்கியமான கல்வி நிறுவனங்கள், அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன . தரமான கல்வி ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up