Pa. Ranjith

Follow
8

User Avg

பா.ரஞ்சித்தை நோஸ்கட் பண்ணிய கார்த்தி

பா.ரஞ்சித்தை நோஸ்கட் பண்ணிய கார்த்தி

நேற்று ஆயுதபூஜையும் அதுவுமாக கைதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில்,
“சிலகதைகளை கேட்ட உடனே பிடித்து விடும். மெட்ராஸ் கதையும் அப்படி தான் கேட்ட உடனே பிடித்தது. ஒரு சுவரை வைத்து படம் என்றதும் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் அதற்குப் பின்னால் அவ்வளவு அரசியல் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. மெட்ராஸ் படத்தின் கதைதான் பிடித்திருந்தது. அதில் என் கேரக்டர் பிடிக்குமா என்றால் தெரியாது” என்றார். மேலும் கைதி படத்தின் கதையை ஒன்லைனாக கேட்கும் போதே மிகவும் பிடித்து விட்டது என்றார். மெட்ராஸ் படம் கார்த்தி கரியரில் முக்கியமான படம். பெரிய வெற்றிபெற்ற படமும் கூட. ஆனால் அந்தப்படத்தின் கேரக்டர் தனக்குப் பிடிக்கவில்லை என்பது போல் கார்த்தி பேசி இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up