Tamil Movie Ads News and Videos Portal

படம் எடுப்பவர்கள் கவனமாக இருங்கள்- ராதாரவி

 

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு நடிகர் பேசியதாவது,

கல்தா” படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயகுநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார் சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும்” என்றார்

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline