Gameover

Follow
7

Good

படம் முழுக்க வீல்சேரில் தோன்றும் டாப்ஸி

படம் முழுக்க வீல்சேரில் தோன்றும் டாப்ஸி

‘வெள்ளாவி தேவதை” யாக தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகமான நடிகை டாப்ஸி, அடுத்த சில படங்களில் நடித்ததோடு தமிழ்த் திரையுலகில் காணாமல் போனார். பின்பு பாலிவுட்டில் நுழைந்த அவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றி பெற்றன. அப்படி அவர் நடிப்பி வெற்றிபெற்ற பிங்க் திரைப்படம் தான் இப்பொழுது அஜீத்குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் “கேம் ஓவர்” திரைப்படத்தின் மூலம் டாப்ஸி தமிழுக்கு திரும்பி இருக்கிறார். ‘மாயா’ படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்னின் சரவணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை வொய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்து உள்ளது. படம் குறித்துப் பேசிய இயக்குநர் ‘திரில்லர் வகைத் திரைப்படமான இப்படத்தில் முழுக்கவே டாப்ஸி வீல்சேரில் அமர்ந்தபடி நடித்திருக்கிறார்.” என்று தெரிவித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வரும் ஜூன் 14 அன்று மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up