Pakkiri

Follow
6.5

Fair

6.8

User Avg

Pakkiri Review

பக்கிரி – விமர்சனம்

ஒரு பயணம் மூலமாக ஒரு கதைசொல்லி சிரிக்க வைத்தும் சில இடங்களில் மலைக்க வைத்தும் அனுப்புகிறது பக்கிரி.
“சிவாஜிக்கு சதை நடிக்கும் என்றால் தனுஷுக்கு எலும்பு கூட நடிக்கிறது” என்று ஒரு முன்னணி இதழில் எழுதி இருந்தார்கள் அந்த வார்த்தைகளுக்கு தனுஷ் பக்கா பிட் என்பதால் தான் இன்று ஹாலிவுட்டில் கால் பதித்து கெத்து காட்டி இருக்கிறார்.

ஜெயிலில் இருக்கும் மூன்று சிறுவர்களுக்கு கதை சொல்கிறார் தனுஷ். அந்தக்கதையில் அப்பா இல்லாத தனுஷ் அம்மா கைப்பிடியில் வளர்கிறார். வளரும் போது தானொரு ஏழை என்ற எண்ணமும், தான் பணக்காரன் ஆகவேண்டும் என்ற வேட்கையும் தனுஷுக்குள் கொழுந்து விட்டு எரிகிறது. மேஜிக் திருட்டு என்ற அவர் வாழ்க்கை பாரிஸுக்கு வரவும் காதலும் பயணமுமாக செல்கிறது. மேஜிக் தெரிந்த தனுஷின் வாழ்க்கையில் அதன் பின் நடக்கும் மேஜிக்குகள் தான் மொத்தப்படமும்.

சுற்றி இருக்கும் மொத்தக் கதாப்பாத்திரங்களும் அந்நியமானவர்கள் தான். ஆனாலும் தனுஷ் அவர்களோடு தன்னை அழகாக பொருத்திக் கொள்கிறார். கதையில் இருந்து அவரை தனியே பிரித்து எடுக்கவே முடியவில்லை. அவ்வளவு இயல்பாக கதையோடு ஒன்றி அவரால் நடிக்க முடிகிறது. படத்தின் ஆகப்பெரும் சுவாரஸ்யம் தனுஷ் தான். அவரது காதலியின் கேரக்டரும் ஒரு பிரபல நடிகையின் கேரக்டரும் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஆங்கிலப்படத்தை தமிழ் மொழிப்பெயர்ப்பில் பார்ப்பது பெரிய டாஸ்க்கை எதிர்கொள்வது போலதான். கூடுமானவரை பக்கிரியில் வசனத்தை உதட்டோடு மன்றாட வைக்காத வகையில் எழுதி இருக்கிறார்கள். பின்னணி இசையில் படத்தின் தன்மைக்கேற்ற துள்ளல் இருக்கிறது. ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம் என்று சொல்லமுடியாது. படமே ஹாலிவுட் படம் தானே!

அகதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லாமையும், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வருவது ஏதோ சின்னாளப்பெட்டியில் இருந்து கொட்டாம்பட்டிக்கு மாட்டுவண்டியில் வருவது போல சாதாரணமாக வரும் லாஜிக் உறுத்தல்களும் படத்தில் சின்னக் குறையாகத் தெரிந்தது.

ஒரு கதை சொல்வதன் வழியில் மூன்று சிறுவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற கதை நாயகனின் நேர்மையில் பங்கம் விளைவிக்கும் விதமாக லெஸ்பியன் பற்றிய சித்தரிப்புகள் கதையில் வருகிறது. சிறுவர்களுக்குச் சொல்லும் கதையில் ஏன் அந்த லெஸ்பியன் போர்ஷன்? அது வெறும் காமெடிக்காக என்றாலும் கதை டிமாண்ட் பண்ணவே இல்லையே பாஸ்!

வாழ்க்கையில் சில நேரம் லாஜிக்கை மீறி மேஜிக் வேலை செய்யும். பக்கிரியில் அது நன்றாக வேலை செய்திருக்கிறது.
-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up