பார்த்திபனை பழி தீர்ப்பாரா சூர்யா? ஒரு கதை இருக்கு சார்

பார்த்திபனை பழி தீர்ப்பாரா சூர்யா? ஒரு கதை இருக்கு சார்

நடிகர் சூர்யா பார்த்திபன் இருவருக்கும் தங்கள் படங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பஞ்சாயத்து ஒன்று உண்டு. 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் மாபெரும் ப்ளாப் ஆனது. அதே டைமில் வெளியான பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்தப்படங்கள் வெளிவருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பார்த்திபனுக்கு நடந்த சம்பவங்களை நினைத்தால் பலருக்கு இப்போதும் கண்ணீர் வரும். மிகச்சிறப்பாக படத்தை எடுத்தபின் தியேட்டர்கள் கிடைக்காமல் பார்த்திபன் அல்லாடினார். ஒவ்வொரு தியேட்டர்காரர்களும், “சார் சூர்யா லிங்குசாமி கூட்டணியில அஞ்சான் வருது. அதை ஓட்டாம உங்க படத்தை ஓட்டினா பிறகு நாங்க தியேட்டர்ல ஈ தான் ஓட்டணும்” என்பது போல கலாய்த்து தள்ளினார்கள். மனம் தளராத பார்த்திபன் பெரிய போராட்டங்களுக்கு இடையே படத்தை வெளியீட்டார். சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் ஒரு காட்சிக்கே பார்த்திபனை கெஞ்ச விட்டார்கள். படம் வெளியாகி பர்ஸ்ட் சோ முடிந்ததுமே ஆடியன்ஸ் ரிப்போர்ட் எகிறி அடித்தது. அஞ்சான் படத்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அடுத்தநாளே காட்சிகள் மாறியது. ஒரு காட்சிக்கு மறுத்த திரையரங்கமே பல காட்சிகளை பார்த்திபன் படத்திற்கு அள்ளிக் கொடுத்தது. இப்போது 5 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் காப்பான் படமும் பார்த்திபனின் ஒத்த செருப்பு படமும் ஒரே நாளில் (செப்டம்பர் 20)வெளியாக இருக்கின்றன. பார்த்திபனிடம் தோற்ற வலி இன்னும் சூர்யாவிற்கு இருக்கிறது என்கிறார்கள் சிலர். பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up