Rajinikanth

Follow

“பாவம் விட்டிடுங்கய்யா ரஜினியை” ஒரு வேதனைப்பதிவு

“பாவம் விட்டிடுங்கய்யா ரஜினியை” ஒரு வேதனைப்பதிவு

சூப்பர் ஸ்டார் ஆகும் முன்னரே. வெறும் ரஜினிகாந்த் தாக நடிப்பில் பல பரிமாணங்களை புதுமையாய் காட்டி அசத்தியவர்..

1981 ஆம் ஆண்டு பிறப்பற்கு முன்பே, நடிப்பில் 90 சதவீதத்தை எட்டிவிட்டார். 1980களில் கமர்சியல் வசூல் மன்னனாய் உயரப்போனவருக்கு தளபதி, பாட்சா போன்ற சொற்ப படங்கள்தான் பின்னாளில் நெருப்பு பொறிக்கு சரியாக தீனி போட்டன…

மத்ததெல்லாம் அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஓவர் பில்டப் கொடுத்த டைரக்டர்களின் அக்கப்போர்கள்தான்..கடைசி 15 நிமிடம் மட்டும் ரஜினி தலைகாட்டியிருந்தால் குசேலன் படம் பிளாக் பஸ்டராகி எங்கோ போயிருக்கும். நாசமாகியிருக்காது

33 ஆண்டுகளாய் எத்தனையோ வேடங்களில் நடித்த வரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து, வெறுமனே உட்காரவும் நடக்கவுமே செய்து முதல் மரியாதை என்ற படத்தை கொடுத்து சிவாஜி என்ற கலைஞனையே வியக்க வைத்தார் பாரதிராஜா.

40 ஆண்டுகால நடிப்பு அனுபவத்தை போட்டு கசக்கி எடுக்காமல் தேவர் மகனில் நடிகர் திலகத்திடமிருந்து நாசூக்காய் உறிஞ்சு எடுத்து கொடுத்தார் டைரக்டர் பரதன்

ஆனால் ரஜினி என்றாலே இப்படித்தான் என்ற முடிவு கட்டிவிட்டவர்கள் கடைசிவரை, அவரின் இயல்பான நடிப்பிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கமாட்டார்கள் போல..
கமலஹாசன்கூட பாபநாசம், உன்னைப்போலஒருவன் போன்ற படங்களில் கதையிடம் தன்னை இயல்பாக ஒப்படைத்துக்கொண்டார்.

70 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ரஜினியிடம் ஆயுதங்களை கொடுத்து இன்னமும் ஒரே நேரத்தில் பத்து பேரை அடிச்சு போட்டு பஞ்ச் டயலாக் பேசச்சொல்லி கொடுமைப்படுத்துகிறார்களே என்ற புலம்பலை பரவலாய் கேட்கமுடிகிறது.

நம்மை கேட்டால், எவனையும் அடிக்காமல் இருந்த இடத்திலேயே எதிரிகளை படம் முழுவதும் மூளைப் பலத்தால் ஓடச்செய்கிற ஒரு பாத்திரத்தை நல்ல திரைக்கதையோடு கொடுத்துப்பாருங்கள். ரஜினி என்கிற நெருப்பு இந்த வயசுலேயும் பின்னியெடுத்து அனல் கக்கும் என்றுதான் சொல்வோம்.

நமக்கு கிடைத்த ஒரே அதிர்ஷ்டம், 35 ஆண்டுகளுக்கு முன்பு அற்புதமான ரஜினியை ஒரிஜினாலிட்டியுடன் காட்டிய டைரக்டர்கள் கிடைத்தார்கள் என்பதுதான்.
-ஏழுமலை வெங்கடேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up