Amala Paul

Follow

‘பொன்னியின் செல்வன்”னில் இணையும் அமலாபால்

‘பொன்னியின் செல்வன்”னில் இணையும் அமலாபால்

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் காலம் தொட்டே எழுத்தாளர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலைத் திரைப்படமாக எடுக்க பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த முயற்சி தற்போது இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு கைகூடி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படத்தினை எடுப்பதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனை இரண்டு பாகமாக எடுக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில், புதிய தகவலாக நடிகை அமலா பாலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up