Bodhai Yeri Budhi Maari

Follow

“போதையேறி புத்திமாறி ” படம் என்ன சொல்லுது?

“போதையேறி புத்திமாறி ” படம் என்ன சொல்லுது?

ஒரு படம் பாடமெடுக்கும் மனோபாவத்தோடு வெளியானால் நிச்சயம் அதில் பிரச்சார நெடி இருக்கும். அந்தப் பிரச்சாரத்தை பிரசாதமாக கொடுத்தால் நோ ப்ராப்ளம். பட் அதை அப்படியே பிரச்சாரமாக கொடுத்தால் கொஞ்சம் ரசிகன் மிரளத்தான் செய்வான். நாளை வெளியாக இருக்கும் போதையேறி புத்திமாறி படத்தின் சாரம்சமும் பிரச்சாரம் பிரசாதம் இரண்டும் கலந்து மய்யத்தில் நிற்பதாக படம் பார்த்த பத்திரிகையாளர்கள் சொல்லக் கேட்க முடிந்தது. நேற்றுப் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. படம் பார்த்த பத்திரிகையாளர்கள், “படத்தின் அடிப்படை நோக்கம் சிறப்பாக இருந்தது. உள்ளடக்கம் இருந்த அளவிற்கு படத்தின் உருவாக்கம் இன்னும் மேற்பட்டிருந்தால் மிகச் சிறப்பானதொரு படமாக வந்திருக்கும்” என்றார்கள். மேலும், “இந்த மாதிரி படங்கள் தான் தற்போதைய சமூகத்திற்கு அவசியத் தேவை” என்றார்கள். K.R சந்துரு இயக்கியுள்ள இப்படத்தில் தீரஜ் நாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஸ்ரீ நிதிசாகர் தயாரித்துள்ளார். போதை என்ற வஸ்து ஒரு மனிதனின் புத்தியை நிலை தடுமாறச் செய்து அவன் அக/புற வாழ்வையே நாசமாக்கி விடும் என்ற நல்ல மெசேஜை சொல்லி இருக்கிறது இப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up