Pa. Ranjith

Follow
9.9

User Avg

”இராஜராஜசோழன் ஆட்சிக்காலம் இருண்டகாலம்” – இயக்குநர் பா.ரஞ்சித்

”இராஜராஜசோழன் ஆட்சிக்காலம் இருண்டகாலம்” – இயக்குநர் பா.ரஞ்சித்

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, “ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மையாகவே அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் ஆகும். அவரது ஆட்சிக்காலத்தில் தான், தஞ்சையின் டெல்டா மாவட்டப்பகுதிகளில் சாதியக் கொடுமை அதிகமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் விலைநிலங்கள் அவரது ஆட்சிக்காலத்தில் தான் பறிக்கப்பட்டது. மேலும் 400க்கும் மேற்பட்ட பெண்களை விலைமாதர்களாக மாற்றி, மங்களவிலாஸ் நடத்தியதும் அவரது ஆட்சியில் தான்..” என்று இராஜராஜசோழனை விமர்சித்துப் பேசினார். இது குறித்து தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாலா மாவட்ட எஸ்.பியிடம் ‘இயக்குநர் இரஞ்சித் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும், இந்துப் பெண்களை அவமதித்ததோடு சாதியப் பிரிவினைகளை ஏற்படுத்தும்படி அவர் பேச்சு அமைந்திருந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ..” என்று புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up