”ராங்கி” யாக த்ரிஷா

”ராங்கி” யாக த்ரிஷா

நயன்தாராவைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மெகா வெற்றியைப் பெற்றதோடு, அப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பும் பாராட்டப்பட்டது. இதனால் அடுத்து நடிக்கும் படங்களின் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்து வரும் த்ரிஷா, தற்போது ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் “ராங்கி” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் கூடுதல் கதை வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பின் பெரும்பகுதி வெளிநாட்டில் நடந்து முடிந்துள்ளது. இன்னும் சில காட்சிகள் மட்டும் சென்னையில் எடுக்கப்படவுள்ளன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் த்ரிஷாவை வெளிநாட்டு போலீஸார் கைது செய்வது போல் காட்சி இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up