Reel

Follow
4.7

User Avg

Reel Review

ரீல்- மினி விமர்சனம்

வாழ்வில் தடம் மாறும் சூழலை சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது என்ற கருத்தை கழுத்தை நெரிக்கும் கோர்வையில் சொல்லி இருக்கும் படம் ரீல்.

உதய்ராஜ் நாயகனாக நடிக்க அவிந்திகா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிப்பில் இவர்கள் இருவரும் இன்னும் தேர்ச்சிப் பெறவேண்டும் என்பதை இப்படம் நிறைய இடங்களில் உணர்த்தியது.

கதையின் போக்கும் திரைக்கதையின் போக்கும் கொஞ்சம் பழைய பார்மட்டில் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஒழுங்கீனங்களை அளவுகோலாக வைத்து ஒரு பெண்ணை எடைபோடக்கூடாது என்ற கருத்தை லைட்டாக தொட்டிருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பலமாக இருந்திருக்கலாம். விஜய் டிவி புகழ் சரத்தை நன்றாக யூஸ் பண்ணி இருக்கலாம். களை கட்டும் காட்சிகளை விட களை வெட்டக் கூடிய காட்சிகளை எடிட்டர் சாய் சுரேஷ் கண்டெடுத்து வெட்டி இருக்கலாம்.

ஒருபடத்தின் விமர்சனத்தில் நிறைய ‘லாம்’ இருக்கக் கூடாது என்பார்கள். ரீலில் அது ரீலுக்கு ரீல் இருக்கிறது. இருந்தாலும் புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்கள். இப்படத்தை ஸ்ரீ முருகா மூவி மேக்கர்ஸ் தயாரிக்க திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் முனுசாமி.

இந்த ரீலை விட அடுத்த ரீல் நன்றாக வொர்க்கவுட் ஆக வாழ்த்துகள் 🎊
-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up