Sivakarthikeyan

Follow

ரோபோ சங்கரின் பேச்சுக்கு பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு

ரோபோ சங்கரின் பேச்சுக்கு பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு

எஸ்.எம்.எஸ் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “மிஸ்டர் லோக்கல்”. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர், பத்திரிக்கையாளர் காட்சியின் போது, பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளின் போது பத்திரிக்கையாளர்கள் யாரும் அக்காட்சிகளை கைதட்டி ரசிப்பதில்லை. அமைதியாகவே பார்க்கிறீர்கள். இப்பொழுதும் கூட நடிகர்கள் மேடைக்கு வரும் போது கூட நீங்கள் யாரும் கைதட்டவில்லை என்று குறை கூறினார். அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர்கள், படத்தை கைதட்டி ரசித்தால், எப்படி கவனித்து எழுதுவது என்று கேள்வி எழுப்பினர். எனக்கு ஏன் என்று பதில் தெரியாததால் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன் என்று ரோபோ சங்கர் சமாளித்தார். உடனே அவர்களை இடைமறித்தப் பேசிய சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் கடமையை செய்ய வந்திருக்கிறார்கள். ரசிகர்கள் யாரும் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை என்று விளக்கமளித்து சூழலை சமாளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up