எஸ்.ஜே சூர்யா vs சிவகார்த்திகேயன் மான்ஸ்டர் கேம்

எஸ்.ஜே சூர்யா vs சிவகார்த்திகேயன்  மான்ஸ்டர் கேம்

எஸ்.ஜே சூர்யா இயக்குநர் அவதாரத்தை கலைத்து நடிகர் அரிதாரம் பூசி வெகுநாட்களாகி விட்டது. இறைவி நடிப்பில் அவரை ஒரு மாஸ்டர் பீஸாக அடையாளம் காட்டியது. மெர்சல் அவரை மான்ஸ்டர் ஆக்டர் என்ற விசிட்டிங் கார்டை கொடுத்தது. ஸ்பைடர் படமும் அவர் நடிப்பிற்கு தீனி போட்டது. தற்போது அவர் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதே நாளில் தான் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடித்துள்ள Mr லோக்கல் படமும் வெளியாக இருக்கிறது. எஸ்.ஜே சூர்யா பேசிக்லி ஒரு இயக்குநர் என்பதால் அவர் சரியான கதையை தேர்ந்தெடுத்து இருப்பார். அந்த வகையில் மான்ஸ்டர் படம் கவனிக்க வைக்கும் என்கிறார்கள். அதேபோல் இயக்குநர் ராஜேஷ் காமெடியில் கிங். அவரோடு சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதால் இப்படம் குறைந்த பட்ச நகைச்சுவைக்காவது கியாரண்டி என்கிறது கோடம்பாக்கம். பார்க்கலாம் யார் வின்னர் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up