Samantha Akkineni

Follow

சமந்தா கர்ப்பம்; அனுபமா காதல் என வரிசை கட்டும் வதந்திகள்

சமந்தா கர்ப்பம்; அனுபமா காதல் என வரிசை கட்டும் வதந்திகள்

சமூக வலைதளங்கள் பல நன்மையான விசயங்களை பகிருவதற்காக பயன்படுத்தப்பட்டாலும் கூட திரை பிரபலங்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் வாழ்க்கையில் நடக்கும் தனிப்பட்ட விசயங்கள் தொடர்பான வதந்திகளைப் பரப்புவதில் தான் பெரும் பங்காற்றுகின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது. சில தினங்களாக நடிகை நாகசைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும், மலையாளத்தில் “பிரேமம்” மற்றும் தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்புரித் பும்ராவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் வதந்திகள் வலம் வருகின்றன. இந்த காதல் வதந்திக்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பும்ரா அனுபமாவை ஃபாலோ செய்வது அச்சாரமாக அமைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் சமந்தா கர்ப்பம் என்பதை எதை வைத்து கிளப்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் நடிகை சமந்தா ‘நான் கர்ப்பமானால் தயவு செய்து எனக்கும் தெரியப்படுத்துங்கள்’ என்று வலையுலக வதந்தியாளர்களை கிண்டல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up