சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் வணிகரீதியிலான வெற்றியைப் பெற்றதோடு, மக்கள் மத்தியில் பரவலான பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் இந்திப்பட உலகில் நடந்து வருகின்றது. ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரும், தன் மனைவியின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை தமன்னா, தனக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரபல டென்னிஸ் வீராங்கணையான சானியா மிர்ஷாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே இனி வரும் காலத்தில் நாம் தமன்னாவை மயிலாகப் பார்க்கப் போகிறோமா..? இல்லை டென்னிஸ் கோர்ட்டில் ஒரு புயலாகப் பார்க்கப் போகிறோமா..? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.