Tamil Movie Ads News and Videos Portal

சதுரங்க வேட்டை ‘இஷாரா’ நடிக்கும் புதிய படம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நாயகனாக நடித்த திரைப்படம் “சதுரங்க வேட்டை”. இப்படத்தில் நட்ராஜ்க்கு ஜோடியாக நடித்தவர் நாயகி இஷாரா. இவர் தற்போது நடிகர் அகிலுக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் கெவின் இப்படத்தை இயக்குகிறார். “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா..?” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நடிகர் துரை சுதாகர் மற்றும் திருமுருகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் படம் வெளியாகும் போது, இது படத்திற்கு எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்பது தெரியும்.” என்று படத்தின் நாயகன் அகில் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline