சத்தியமா உங்களுக்கு புரியாது.. நடைய கட்டுங்க..

சத்தியமா உங்களுக்கு புரியாது.. நடைய கட்டுங்க..

தமிழ்நாட்டில் தமிழ்ப்படங்களுக்கு செமையாக டஃப் கொடுத்த இந்தி ஹிட் பட ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர், இயக்குநர் கம் தயாரிப்பாளரான நஸிர் உசைன்..

மென்மையான காதல் காட்சிகளுடன் போய்க்கொண்டி ருந்த இந்தி சினிமாவை கிளாமர், ஸ்டேஜ் பாட்டு டான்ஸ் என்று இளமையை வாரியிறைத்து ஒரு டிரெண்ட்டை உருவாக்கியவர் உசைன்..

ஆராதனா படம்மாதிரி தமிழகத்தில் பரவலாக 1970களில் எல்லாருக்கும் தெரிஞ்ச இந்தி படம் யாதோன் கி பாரத்.. பாட்டுகளை கேக்காத தமிழ் காதுகளே இருக்காது..

பாட்டுடன் டான்ஸ்,கிளாமர்னு இளைமை துள்ளும்.. எல்லாத்தை யும் விட சின்னவயசில் மிஸ்ஸாகிபோன அண்ணன்களை குடும்ப பாட்டு ஒன்னு வெச்சிட்டு கிடார் வாசிச்சி தேடோ தேடோன்னு தம்பி தேடுவாரு.. (இந்த படம்தான் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே)

யாதோன் கி பாராத்தை தயாரித்து இயக்கிய நஸீர் உசைன் வித்தியாசமான ஆளு. நாலு வருஷத்துக்கு முன்னாடியே பியார் கா மோசம்னு ஒரு படம்.அதுலேயே குடும்ப பாட்டை ஆரம்பிச்சிட்டாரு.

சசிகபூர், பரத் பூஷன்னு தும்பின் ஜகோ கஹாங்னு படம் முழுக்க சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாடித்தள்ளுவாங்க..ஆனா கேட்பவர்களுக்கு அலுக்கவே அலுக்காது. ஸோ சுவீட் ரகம்.

பாடல் காட்சிகளில் சுவை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்த நாஸீர் உசைனின் பாதை அவ்வளவு வெற்றிகரமானது,

1961ல் தேவ் ஆனந்தின் ஜப் பியார் கிஸிசி படத்தில் ரயிலில் பயணிக்கு இளம்பெண்ணை காரில் விரட்டியபடியே ஹீரோ பாடுவார், அந்த பாடல் செம ஹிட். 1969ல் ஆராதனாவில் அதே மாதிரி எடுக்கப்பட்டதுதான் மேரி சப்னோகி ராணி பாடல்

இந்தி நடிகைளில் டாப் ஸ்டராய் உருவெடுத்து ஆஷா பரேக்கை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி அவரை வைத்தே தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தவர் நஸிர் உசைன்..

அவர் தயாரிப்பில் வெளியான தீஸ்ரி மன்சில் படத்தில், ஆஷா பரேக் ஆடிய, ஒ ஹசீனா சுல்ஃபோ வாலா பாடல்.. அதையெல்லாம் விவரிக்கவே முடியாது.. பார்த்தாலொழிய நோ சான்ஸ்..

நஸிர் இயக்கம் என்றால் பாடல்கள் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.. ஒரு பாட்டே ஒட்டு மொத்த படததையும் தூக்கிக்கொண்டு ஓடிபபோயிவிடும்..

கேரவன் படம் என்றால் ஹெலன் டான்ஸ் ஆடும் மோனிகா என ஆரம்பித்து அப்தோ ஆஜா ஓடும் பாடல்,

ஹம் கிஸிசே கம் நஹி படம் என்றால் பச்சனா ஹே ஹசி உள்பட எத்தனையோ காம்பிடேஷன் பாடல்கள்,

ஸமானோ கோ திஹானா ஹை படம் என்றால் ஓடும் அந்த ரயில் மேல் லவ்வர்பாய் ரிஷிகபூர் பாடும். ஹோகா தும்சே பியாரா கோன் பாடல்..

இந்த பாடல்களயெல்லாம் பார்த்தவங்களுக்கு மட்டுமே புரியும்..ஒரு காலத்துல கேட்டவன் அத்தனைபேரையும் பைத்தியம் பிடிக்க வைத்த பாடல்கள்..

நம்மூர் பாஷையில் சொன்னால் பாடல்கள் நடனங்களுக்காகவே பார்ப்பவர்களை உற்சாகத்தில் தோய்ச்சி தொங்க போட்டுவிடும்..

திரும்ப திரும்ப தியேட்டருக்கு ரசிகர்களை வரவ ழைத்து பாக்கெட்டை காலிசெய்தவை.. இன்றைக்கும் நஸிர் உசைனின் இந்த படங்கள் அவ்வளவு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

50 களில் தலையெடுத்த உசைன், 1988ல் அமீர்கானை வைத்து எடுத்த கியாமத் சே கியாமத் தக் படம் ரசிகர்களை எப்படி பாடல்களால் பைத்தியம் பிடிக்க வெச்சிதுன்னு இப்போது பலருக்கும் தெரியாது..

ஒரு படம் எப்படி இன்ட்ரஸ்ட்டிங்காக இருக்க வேண்டும் என்பதை அற்புதமாக கற்றுவைத்திருந்தவர் நஸிர் உசைன்.. இந்தி சேனல்களில் இவரது படங்களும் அவற்றின் பாடல்களும் இன்றும் சுழற்றி சுழற்றி அடித்தபடியே உள்ளன

இயக்குர், தயாரிப்பாளர், கதையாசிரியர் நஸீர் உசைனின் 17 வது நினைவு தினம் இன்று?

-ஏழுமலை வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up