சிறகு படப்பதிவு நாட்கள் தான் என் வாழ்வின் மிகச் சிறந்த நாள்

சிறகு படப்பதிவு நாட்கள் தான் என் வாழ்வின் மிகச் சிறந்த நாள்

கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கியுள்ள சிறகு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில்
இயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது,

“இந்த டீமின் ஹம்பல்ஸில் தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கொரேலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் அவர்கள் மூலமாகத் தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up