Karthik

Follow

”சில படத்திலதான் நடிச்சே ஆகணும்னு தோணும்” – கார்த்தி

”சில படத்திலதான் நடிச்சே ஆகணும்னு தோணும்” – கார்த்தி

’மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் “கைதி”. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் அமோகமான வரவேற்ப்பைப் பெற்று வருகிறது. இப்படம் குறித்துப் பேசும் போது நடிகர் கார்த்தி, “ சில படங்களோட கதைய கேட்கும் போதுதான் இந்தப் படத்துல நடிச்சே ஆகணும்னு தோணும்.. மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று இந்தப் படங்கள மாதிரி, இப்ப இந்த வரிசைல கைதியும் வந்திருக்கு..” என்று குறிப்பிட்டுப் பேசிய அவர், தனிப்பட்ட முறையில் எனக்கு ஆக்ஷன் வகைத் திரைப்படங்கள் பிடிக்கும். இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்திருக்கிறது. ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்..” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜுடன் பணிபுரியும் ஆடை இயக்குநர்

‘மாநகரம்’ ‘கைதி’ திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜயை தனது படத்தில் இயக்கவிருக்கிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், வர்கீஸ் மற்றும் பலர் நடிக்கவிருக்கும் இப்படத்தில் திரைக்கதை ஆக்கத்தில் ‘மேயாத மான்’ ‘ஆடை’ படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இனைந்து பணியாற்றவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவரும் நண்பர்கள் என்பதோடு, தளபதி விஜயின் படத்தை லோகேஷ் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானதும், ரத்னகுமார் லோகேஷுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘நடிகர் கமல்ஹாசனின் பரமரசிகரான நீங்கள் உங்கள் படத்தில் தளபதி விஜயிடம் கமலின் பரிமாணத்தைக் கொண்டு வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..” என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up