Tamil Movie Ads News and Videos Portal

மஹாவில் சிம்புவிற்கு மெகா கேரக்டராம்

சிம்பு எப்படா திரையில் வந்து கம்பு சுத்துவார் என்ற ஏங்கிய அவரது ரசிகர்களுக்கு மஹா படத்தின் இயக்குநர் ஒரு தகவல் தந்துள்ளார். இயக்குநர் ஜமீல் கூறியதாவது…

 

“எல்லோரும் “மஹா” படத்தில் சிம்பு ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழுமையான உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் தான் என்றாலும், அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியமானது, கதையில் அவரது கதாப்பாத்திரம் ஃபிளாஸ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடிய பெரிய பாத்திரம் ஆகும். அவர் ஒரு பைலட்டாக நடித்திருக்கிறார். நிஜத்தில் கோவாவில் 30 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பைலட்டுக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவரது கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த கதாப்பாத்திரத்தை மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி உருவாக்கியுள்ளோம். அவரது கதாப்பாத்திரம் பல ஆச்சர்யங்கள் கொண்டிருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் “ஜமீல்”. என்னுடைய பெயரை விளம்பரப்படுத்தும் பொருட்டு இப்படி வைத்திருக்கிறேன் என தப்பாக நினைத்து விடாதீர்கள்” என்றார்

Get real time updates directly on you device, subscribe now.