Sixer

Follow
5.5

Average

Sixer Review

சிக்ஸர்- விமர்சனம்

ஈவ்னிங் சிக்ஸ் ஆயிடிச்சின்னா ஹீரோவுக்கு கண்ணு தெரியாது. இதைத் தவிர படத்தில் வேறு கதையும் கிடையாது. அதனால முடிஞ்சவரைக்கும் இருக்குறதை வச்சி கதகளி ஆடி இருக்கிறார் இயக்குநர் சாச்சி.

சில இடங்கள் அல்ல பல இடங்களில் அநாசமாக ஈர்க்கிறார் வைபவ். சுத்தி நிற்கும் அடியாட்கள் முன்பு கண்ணு தெரியாவிட்டாலும் ஹீரோயின் நிற்கிறார் என்பதற்காக கெத்தை விடாமல் சமாளிப்பதெல்லாம் ஹை க்ளாஸ் காமெடி. சதிஷை பெரும்பான்மை சமூகம் இன்னும் சிறந்த ஒன்லைனர் காமெடியனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஹீரோயின் க்யூட்டாக இருக்கிறார். சிறப்பாக நடிக்கிறார். என்னடா இது மீடியாவுல வேலை பாக்குற பொண்ணு இவ்ளோ மக்காவா இருக்கும்? என்று மண்டையை உருட்டிக்கொண்டிருக்கும் போது பக்காவாக ஒரு ட்விஸ்ட் வைத்து ஹீரோயின் கேரக்டரை சமாதானப் படுத்தி விடுகிறார் இயக்குநர். ராதாரவியின் கேரக்டர் அட்டகாசம். தண்ணியடித்ததை மறந்துவிட்டு தெளிந்த பின் அவர் பேசும் தொனியெல்லாம் அட அட.

சரி இப்படி பாஸிட்டிவ் இருந்தும் படத்துல எதோ ஒண்ணு மிஸ் ஆகுதேன்னு தோணும். அது ஸ்கிரீன்ப்ளே ஏரியா தான். அது அவ்ளோ வீக். ஹீரோவுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கு. ஆனால் நமக்கு பதைபதைப்பு வரவேயில்லை. மேலும் வில்லன் டீமும் அதைவிட வீக். குறிப்பாக கத்தியால குத்துறதை கர்சீப்பை வச்சி முகம் துடைக்கிற மாதிரி அசால்டா பண்ணும் வில்லனின் தம்பி, விஜய்டிவி காமெடி டீம்ட வந்து ஹெல்ப் கேட்குறதெல்லாம் கொடுங்கோன்மை காட்சி.

ஹீரோவின் இலக்கு கல்யாணம் முடிப்பது மட்டும் என்பது தான் என்பதிலே படம் படுத்து விடுகிறது. வில்லனிடம் அவர் மாட்டிக்கொள்ளும் இடத்தில் இருந்து சூடுபிடிக்க வேண்டிய கதை, அடுத்தடுத்த காட்சிகளில் மட்டையாயிடுது. சிக்ஸர் அடிக்க வேண்டிய தேவை இருந்தும் தோனி போன்ற திரைக்கதை இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டம். ஒரே ஒருமுறை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் பங்களாதேஷுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடக்கும் டெஸ்ட் மேட்சை பார்த்தப் பீல் கிடைக்கும்!

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up