Tamil Movie Ads News and Videos Portal

தெலுங்கு “தெறி”யில் ஸ்ருதிஹாசன்

கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ருதிஹாசன், காதலில் ஏற்பட்ட பிரிவை அடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தெலுங்கு படத்தில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் சென்ற வாரம் வெளியானது. தற்போது அந்தத் திரைப்படம் தமிழில் தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தெறி’ படத்தின் ரீமேக் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதில் ஸ்ருதிஹாசன் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கு முன்னர் 2013ல் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த பலுபு படத்தையும் இவர் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.