இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அதிரடித் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அது உண்மையாகும் பட்சத்தில் அது, முதன்முறையாக ரஜினியுடன் யுவன் இணையும் திரைப்படமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கவிருக்கும் யுவன்
