Suriya

Follow

சூர்யாவுடன் இணையும் “பூஜா ஹெக்டே”

சூர்யாவுடன் இணையும் “பூஜா ஹெக்டே”

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த “முகமூடி” படத்தில் நாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே. அப்படத்தின் தோல்விக்குப் பின்னர் பெரிதாக தமிழ்ப்படங்கள் ஏதும் அமையாததால், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சிப்படங்களுக்காக பெரிய ரசிகர் பட்டாளத்தையே ஃபாலோயர்ஸாக கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ‘மகரிஷி’ என்ற தெலுங்குப்படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருந்தார். படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூரரைப் போற்றுவோம்’ திரைப்படத்தில் மற்றொரு நாயகியாக பூஜா நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. ஆனால் இந்தத் தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. மற்றொரு நாயகியாக இப்படத்தில் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up