Dhanush

Follow

தமிழ் ”பேட்மேன்”-ல் நடிப்பாரா தனுஷ்..!?

தமிழ் ”பேட்மேன்”-ல் நடிப்பாரா தனுஷ்..!?

சமீபத்தில் திரைத்துறைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஹிந்தி மொழியில் வெளியான “பேட்மேன்” திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் நமது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘அருணாசலம் முருகானந்தம்’ என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அருணாசலம் பெண்களுக்கான மலிவு விலை நாப்கினை தனது சொந்த முயற்சியில் தயாரித்து அதற்காக அரசிடம் பத்மஸ்ரீ விருது வாங்கியவர் ஆவார். இவரின் வாழ்க்கையை திரைக்கதையாக மாற்றி, அக்ஷய் குமார் நடிப்பில் ‘ பேட்மேன்’ படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் பால்கி. தற்போது இந்த திரைப்படம் தமிழிலிலும் தயாராகவிருப்பதாக செய்தி அடிபடுகிறது. இதனையறிந்த நிஜ பேட்மேன் ஆன அருணாசலம் முருகானந்தம் தனது கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up