தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?

தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? 

150 முதல் 300 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?

இன்றைய மே 3ல் பிறந்த நடராஜ முதலியார்-தான் அவர் .

நம்ம தென்னிந்தியாவின் முதல் சலனப் படத்தைத் தயாரித்த தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் எனலாம்

இந்தியாவின் முழுநீளக்கதைப் படமாக புண்டாலிக் 1912ஆம் ஆண்டு ஆர்.ஜி.டோர்னி என்ற ஐரோப்பியரால் எடுக்கப்பட்டது.இதைத் தயாரித்தவர் வெளி நாட்டவர் என்பதால் இந்தியாவின் முதல் திரைப்படம் என்ற தகுதியை இது பெறவில்லை

இந்தியாவின் முதல் சலனப்படம் ஹரிச்சந்திரா.1913ஆம் ஆண்டு துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் தயாரிக்கப் பட்டது.

இதனால் தாதா சாகிப் பால்கே இந்தியத் திரைப்படத் தந்தை என போற்றி புகழப்படுகிறார்.இப்படம் சென்னை கெயிட்டித் தியேட்டரில் திரையிடப்பட்டது.

இதை கார் வியாபாரம் செய்து வந்த நடராஜ முதலியார் பார்த்தார்.அவருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டது.

ஸ்மித் என்ற ஆங்கிலேயர் அவருக்கு தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார்.

நடராஜ முதலியார், தன் புதிய படபிடிப்பு நிலையத்தைக் கீழ்பாக்கத்தில் டவர் ஹவுஸ் என்ற பங்களா ஒன்றில் துவக்கினார்.இந்தியா ஃபிலிம் கம்பெனி என தன் ஸ்டூடியோவிற்கு பெயரிட்டார்

1916ல் சலனப்படம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு கீசகவதம் என்ற படத்தை எடுத்தார்.

தமிழர் ஒருவரால் தயாரிக்கப் பட்ட முதல் சலனப் படம் இதுவே.35 நாட்கள் படபிடிப்பு.6000அடி படம்.35000 ரூபாய் செலவு

அடுத்தடுத்து 6 படங்களை இவர் தயாரித்தார்

இவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக மற்றொருவரையும் வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால் லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார்.

நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் 1917ல் திரௌபதி வஸ்திராபரணம் என்ற படத்தில் மரினிஹில் என்ற ஆங்கிலோ இந்திய பெண்ணை லியோச்சனா என்ற பெயரிட்டு கதாநாயகியாய் நடிக்க வைத்தார்

படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார்.

இவர் எடுத்த 6 படங்கள்..

திரௌபதி வஸ்திராபரணம்
கீசக வதம்
லவகுசா
ருக்மணீ சத்யபாமா
மார்க்கண்டேயா
காளிங்கமர்தனம்

அவர் ஒரு பேட்டியில்..

தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மக்களின் பண்புள்ள எதிர்கால வாழ்க்கைக்கும்,நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடிய சாதனமாக திரைத்துறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுள்ளார்

1885ஆம் ஆண்டு பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு மறைந்தார்.

ஓர் ஆதங்கம்:

ஒவ்வொரு வருடமும் தெலுங்கு திரையுலகின் தந்தையான வெங்கையா நாயுடு பெயரில் தெலுங்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளருக்கு “நந்தினி வருது” நிகழ்ச்சியில் விருது வழங்கப்படுகிறது.

அதேப் போல், ஜே.சி.டானியல் நினைவாக கேரள அரசு வாழ்நாள் சாதனை விருது முத்த கலைஞர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் நடராஜ முதலியார் பெயரில் ஒரு விருது வழங்கப்படவில்லை.

அதேப் போல், இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெ.சி.டெனியல் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.

சினிமா நூற்றாண்டை அமோகமாக கொண்டாடி களைத்து போய் விட்ட நாம் தமிழ் சினிமாவின் தந்தையான நடராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை எப்போது திரைப்படமாக எடுக்கப் போகிறோம் ?

குறைந்தப் பட்சம் தமிழ் சினிமாவில் பணியாற்று சினிமாத்துறையினர்களுக்காவது தமிழ் சினிமாவின் தந்தைப் பற்றி தெரிந்திருக்குமா .. ஹூம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up