Ajith Kumar

Follow
7.1

User Avg

தல 61-யை இயக்கப் போவது யார்..??

தல 61-யை இயக்கப் போவது யார்..??

’தல’ அஜீத்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அஜீத். பெயரிடப்படாத இப்படம் தற்போது வரை தல 60 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே அவரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்கின்ற கேள்வியும் அது தொடர்பாக சில தகவல்களும் பரவி வருகிறது. அதன்படி ‘துருவங்கள் பதினாறு’ ’நரகாசுரன்’ ‘மாபியா’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி, மாயா, கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் ஆகியோர் அஜீத்குமாரிடம் ஏற்கனவே கதை சொல்லி இருப்பதால், இவர்களில் ஒருவர் தல 61யை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up