Bigil

Follow
9.8

User Avg

தளபதி விஜய்யுடன் நடிக்கும் கால்பந்தாட்ட வீரர்

தளபதி விஜய்யுடன் நடிக்கும் கால்பந்தாட்ட வீரர்

அட்லி தளபதி விஜய் மூன்றாம் முறையாக இணையும் “பிகில்” திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதில் இருவேறு தோற்றங்களில் நடிகர் விஜய் காணப்பட்டார். அதில் ஒரு தோற்றம் கால்பந்தாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளர் போல தோற்றம் கொடுக்க, மற்றொன்று கிராமத்து மனிதர் போன்ற தோற்றம் கொடுத்தது. இதை வைத்துக் கொண்டு, படம் குறித்தான தகவல்களை பலரும் ஊகித்து வரும் நிலையில், படத்தில் கிராமத்து மனிதர் கெட்டப்பில் இருக்கும் விஜய்க்கு நண்பராக பிரபல கால்பந்தாட்ட வீரர் ஐ.எம்.விஜயன் நடிக்கவிருக்கிறார் என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் திமிரு மற்றும் கொம்பன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாளத்தில் வெளியான கால்பந்து தொடர்பான எல்லாப்படங்களிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பிகில் திரைப்படக் குழுவினருடன் இணைந்திருக்கும் ஐ.எம்.விஜயன் கால்பந்து தொடர்பான பல தகவல்களை தெரிவித்து உதவி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up