”தலைவி” இரண்டு ஆண்டுகளில் உருவாக்கத் திட்டம்

”தலைவி” இரண்டு ஆண்டுகளில் உருவாக்கத் திட்டம்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதில் மும்முனைப் போட்டி நிலவி வந்தது. அப்போட்டியில் முன்னணியில் இருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகஸ்டு மாதத்தில் இருந்து “தலைவி” எனப் பெயரிடப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் பயோஃபிக் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகளை தொடங்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் 2020 முடிவுக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கையை 16 வயதில் இருந்து சொல்லவிருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள். மேலும் ஏ.எல்.விஜய் இப்படத்தை முடித்துக் கொடுக்கும் வரையில் வேறு எந்தவித படம் தொடர்பான பணிகளிலும் ஈடுபடாமல் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up