தேசியவிருது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது- தயாரிப்பாளர் ஆதங்கம்

தேசியவிருது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது- தயாரிப்பாளர் ஆதங்கம்

லிப்ரா புரொடக்சன் சார்பாக வெளியாகவுள்ள ரவிராஜு இயக்கி இருக்கும் படம் ஐங்கரன். ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, வசந்தபாலன், ஆதிக் ரவிச்சந்திரன், சரவண சுப்பையா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, சுரேஷ் காமாட்சி, ஜே.எஸ் கே சதீஷ், நடிகர் ஜி.வி பிரகாஷ் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,

ஐங்கரன் படம் பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன். இப்போதெல்லாம் விருதுகள் எல்லாம் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது தமிழ் படங்கள் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படாதது வேதனைக்குரியது. 96, பரியேறும் பெருமாள், வடசென்னை, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற எத்தனையோ நல்லப்படங்கள் இருந்தும் நாம் மத்திய அரசின் விருதுகளுக்கு அங்கீகரிக்கப் படவில்லை. நாம் தமிழனாகப் பிறந்தது தான் தவறு போல” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up