Thozhar Venkatesan

Follow
6.5

Fair

Thozhar Venkatesan Review

தோழர் வெங்கடேசன்- விமர்சனம்

அரசாங்கப் பேருந்தால் ஏற்படும் விபத்தில் உயிரையோ கை கால்களையோ இழக்கும் பாமரர்களுக்கு அரசாங்கம் தருவதாய் சொல்லும் இழப்பீடு நிச்சயம் ஆறுதல் அல்ல. அது காயத்தை விட பெரும் வேதனை தரக்கூடியது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது தோழர் வெங்கடேசன் படம். மஹாசிவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சுசீந்திரன் தயாரித்துள்ளார். ஹரி சங்கர் மோனிகா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். படத்தின் துவக்கத்தில் மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழும் நாயகன் தாயை இழந்து காமூகர்களின் கொடூரத்திற்கு பயந்து வாழும் நாயகியை தன்னோடு இணைத்துக் கொள்கிறான். படிகளைப் பற்றக்கூடிய நேரத்தில் இடியென வருகிறது ஒரு விபத்து. அதில் இரண்டு கைகளையும் இழக்கிறான். மூன்றாவது கையாக நம்பிக்கை கொண்டு தன்னோடு பயணிக்கும் நாயகியின் துணையோடு இழப்பீடு கோரி அரசாங்கத்தை நாடுகிறான். அராசாங்கம் போக்குவரத்து துறையின் வருமானத்தை காரணம் காட்டி இழப்பீட்டை தர தாமதப்படுத்துகிறது. நீதிமன்றம் ஒரு பஸ்ஸை ஜப்திசெய்து நாயகன் கையில் கொடுக்க, அந்தப்பேருந்தோடு நாயகன் படும்பாட்டையும், இந்த அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தையும் படம் முடிந்தவரைக்கும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளது. ஒளிப்பதிவு, இசையில் இருந்த நேர்த்தி திரைக்கதையின் விறுவிறுப்பிலும் இருந்தால் படத்தில் இன்னும் தீப்பற்றியிருக்கும். நடிகர்களின் நடிப்பில் மோனிகா மிக அழகாக கவனம் ஈர்க்கிறார். ஹரி சங்கர் ஒருசில இடங்களில் அதிகத் தன்மையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் கைகள் இழந்த சோகத்தையும் தன் போராட்டக் குணத்தையும் முகத்தில் சரியாகப் பதிவு செய்துள்ளார். நமது நாட்டின் சட்டத்திட்டம் நம் மண் சார்ந்து அமைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க அந்நிய நாட்டின் சட்டத்திட்டங்களை தான் அமைத்துள்ளனர் என்று படம் இந்தியச் சட்ட அமைப்பையே கேள்விக்கு உட்படுத்துகிறது. இப்படியான படங்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் நம் சமூகம் இருக்கிறது என்பதை படம் முடிந்ததும் காட்டப்படும் அரசாங்க இழப்பீடு இழுத்தப்படிப்பால் அவஸ்தை படும் குடும்பங்களின் வலி மிகுந்த பதிவுகள் உணர்த்துகிறது. தோழர் வெங்கடேசனுக்கு தோள் கொடுக்க வேண்டியது நமது கடமை!

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up