Thumbaa

Follow
7

Good

Thumbaa Review

தும்பா- விமர்சனம்

எதையோ ஒன்றைக்காட்டி அதற்கு புலின்னு பெயர் வைக்கிற கிராஃபிக்ஸ் அலப்பறைகள் இருக்கும் லோ பட்ஜெட் படக்காரர்கள் மத்தியில் லோ பட்ஜெட்டிலும் ஒரு பக்காவான கிராஃபிக்ஸ் புலியைக் காட்டி அசரடித்திருக்கிறது தும்பா டீம். வாழ்த்துகள்!

பொள்ளாச்சிப் பக்கத்தில் உள்ள Top Slip எனும் ஒருகாடு. அது புலிகள் நிறைந்த பகுதி. அங்கு பெயிண்டிங் வேலைக்காக படத்தின் முதன்மை கதாபாத்திரங்களான தர்ஷன் மற்றும் தீனா வருகிறார்கள். அதே காட்டிற்கு புலியை லைவ்-ஆக போட்டோ எடுக்க வேண்டும் என்ற வேட்கையோடு நாயகி கீர்த்திப் பாண்டியன் வருகிறார். அதே காட்டில் இருக்கும் பாரஸ்ட் ஆபிசர் தும்பா புலியை வேட்டையாட துடிக்கிறார். இவர்களுக்கும் புலிக்குமான தொடர்பு தான் தும்பா படத்தின் கதை.

தர்ஷன், தீனா, கீர்த்திப் பாண்டியன் மூவருக்கும் கூத்துப்பட்டறையில் முதல் சீட்டில் உட்கார வைத்து நடிப்புப் பயிற்சி கொடுத்தே ஆக வேண்டும். எமோஷனல் காட்சிகள் காமெடி காட்சிகள் எல்லாம் அவர்களுடைய நடிப்பால் அல்லோலகல்லோலப் படுகிறது. விஜய் டிவி புகழ் பாலா மட்டும் அங்கங்கு சிரிக்க வைத்து அசத்துகிறார். மற்றும் தரணி வாசுதேவ், ஜார்ஜ் விஜய் நெல்சன் ஆகியோர் நல்ல நடிப்பின் மூலமாக கவனிக்க வைக்கிறார்கள்.

படத்தின் நிஜமான கதாநாயகன் கிராஃபிக்ஸ் தான். புலியின் வடிவமைப்பும் ஒரு குட்டிக்குரங்கின் வடிவமைப்பும் அசாத்தியம். ஜார்ஜ் விஜய் நெல்சன் முகத்தருகே புலி வாய் பிளந்து மிரட்டும் காட்சியில் புலியின் முடிகள் அதிரும் போது வாய் பிளக்க வைக்கிறது கிராஃபிக்ஸ் டீமின் பேருழைப்பு. அடுத்து தும்பாவை தெம்பாக்கும் இன்னொரு நபர் ஒளிப்பதிவாளர் நரேன் இளன். காட்டின் அழகை திரையரங்கின் சீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார் மனிதர். படம் பார்க்கும் அனைவரும் கண்ணில் காடுள்ள மனிதர்களாக மாறி விடுகிறார்கள். அனிருத் இசையிலும் குரலிலும் வரும் ஒருபாடல் தரம். பின்னணி இசை பின்பாதியில் மட்டுமே ஈர்க்கிறது. படமும் முன்பாதி நம்மை பாடாய்படுத்தி பாயாய் சுருட்டுகிறது. பின்பாதி மிக அழகாக ஈர்க்கிறது.

கதையை நகர்த்த வழி இல்லாமல் சில காட்சிகளை வழிந்து திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். மனிதனும் விலங்கும் ஒரே இடத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் நம் நாட்டில் காடு வாழும் என்ற கருத்தை சரியாக கன்வே செய்திருப்பதால் இந்தத் தும்பாவிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up