Tolet

Follow
8.5

Great

8.5

User Avg

Tolet Review

டூ-லெட்- விமர்சனம்

ஒரு நல்லா வீடா பார்த்துப் போக வேண்டியதான? என்று அசால்டாக சில வார்த்தைகள் நம்மிடம் வரும். ஆனால் அந்த நல்லவீட்டுக்கான தேடலில் நாம் சந்திக்கும் மனவலிகளையும் இயலாமைகளையும் வார்த்தைகளில் சொல்லிமாளாது. அதை திரையில் கச்சிதமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் செழியன்.

ஒளிப்பதிவில் தனியனாக இருந்த செழியன் இந்தப்படம் மூலமாக சர்வதேச அளவில் தமிழ்படத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்து திரைமொழியின் இனியனாக மாறி இருக்கிறார். செவுரில் இருக்கும் ஒட்டடையையும் கூட அவர் நடிக்க வைத்திருக்கிறார். சின்ன சின்ன வசனங்களிலும் அவ்வளவு மெனக்கெடல். சந்தோஷ் நம்பிராஜனும் ஷீலாவும் டூலெட்-ல் வாழ்ந்திருப்பது நமக்கு படம் பார்க்கும் உணர்வை தராமல் அவர்களின் வீட்டைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது. குறிப்பாக அந்தச் சிறுவன் நடிப்பில் குறி பார்த்து அடித்திருக்கிறான்.
2007-ம் ஆண்டு வந்திறங்கிய ஐடி கம்பெனிகளால் நகர நடுத்தர வர்க்கங்களின் வாழ்க்கை எவ்வளவு மன வேதனைக்கு உள்ளாகியுள்ளது என்பதை செழியன் திரைமொழி வாயிலாக வார்த்திருப்பது ஒரு உலகசினிமா அனுபவம். தயவுசெய்து தரவிறக்கத்தை மறந்து தியேட்டரில் சென்று பாருங்கள்!

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up