Tamil Movie Ads News and Videos Portal

கடும்குளிரிலும் கம்பாக நின்ற ராங்கி “த்ரிஷா”

‘96’ படத்தின் வெற்றி நடிகை த்ரிஷாவினை மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அப்படம் வெளியாகும் முன்பும் அவர் தொடர்ச்சியாக ஹீரோயின் சப்ஜெக்ட் தொடர்பான படங்களில் நடித்து வந்து கொண்டு இருந்தாலும், முன்பு அவர் படங்கள் மீது இல்லாத கவன ஈர்ப்பு, இப்பொழுது அவரின் ஒவ்வொரு படத்தின் மீதும் ஏற்பட்டுள்ளது. தற்போது ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் “ராங்கி” படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கதை வசனம் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உஸ்பெகிஷ்தான் நாட்டில் நடந்து வருகிறது. அங்கு கடும் குளிர் தற்போது நிலவுகிறது, மைனஸ் 2 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் குளிர் நிலவும் அப்பகுதிகளில் அதிகாலை படப்பிடிப்பிற்குக் கூட கரெக்டான டயத்திற்கு ஆஜர் ஆகி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறாராம் த்ரிஷா. இது தவிர்த்து பரமபத விளையாட்டு, பொன்னியின் செல்வன், சுகர் ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார் த்ரிஷா.

Get real time updates directly on you device, subscribe now.