வருந்துகிறேன் வைரமுத்து அவர்களே! பாடலாசிரியர் அதிரடி

வருந்துகிறேன் வைரமுத்து அவர்களே! பாடலாசிரியர் அதிரடி

முன்னவரே,
மூத்தவரே,
வித்தகரே
வீரியரே,

வணக்கம்,

தமிழ் சினிமா, தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு தளத்திலும் மறக்க முடியாத மறுக்க முடியாத திறமைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் நீங்கள்.

பாடலாசிரியர் தொழில் மீது எனக்கு பெரும்போதையும் ஈர்ப்பும் ஏற்பட நீங்கள் தான் ஆகப்பெரிய காரணம்.

என்னிடம் பாட்டெழுதுவது எப்படி என்று உதவி கேட்கிற, பயிற்சி எடுத்துக் கொள்கிற அனைவருக்கும் நான் பயிற்சியின் போது அதிகப்படியாக மேற்கோள் காட்டுவது நீங்கள் எழுதிய பாடல்களையே.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் உருவாக்கிய 37 இசையமைப்பாளர்கள் + 38-ஆவது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் …. என நீங்கள் பேசிய கருத்து உங்கள் வெறுப்பையும் ஆணவத்தையும் காட்டுவதாகவே இருக்கிறது.

இவ்வளவு பெருமையும் திறமையும் புகழும் அங்கீகாரமும் கிடைத்த பின்னும் கூட நீங்கள் இப்படியான மனநிலையில் பேசுவது மிக மிக வருந்தத்தக்க விஷயம்.

ஏ.ஆர்.ரகுமானின் ஒரு பேட்டியில், உங்களுக்கு ரோஜா பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்?

என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

அதற்கு ரகுமான்,

ரோஜா இல்லை என்றால் ஒரு மல்லிகை கிடைத்திருக்கும்

என்ற அடிப்படையில் பதில் சொல்கிறார்.

அவ்வளவு தான்.

நீட்டி முழக்கி விவரிக்க வேண்டிய அளவுக்கு மொழி அறியாதவர் அல்ல நீங்கள்.

உங்கள் வார்த்தைகள் மற்றும் பேசிய கருத்தில் உள்ள ஆணவத்தையும் வன்மத்தையும் தமிழ் சமூகமும் ஊடகங்களும் உங்கள் மீதான மதிப்பு மரியாதை உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காக பெரிது படுத்தாமல் விட்டு விடக் கூடும். ஆனால் வரலாறு உங்களை அப்படி விட்டு விடாதே.

உங்கள் மொழியையும் உங்கள் வார்த்தைகளையும் அதன் உள்ளீடாக இருக்கும் உளவியலையும் அதன் பொருளையும் நீங்கள் மட்டுமே அறிவீர்கள் என நினைத்துக் கொள்ளாதீர்கள்.

37 பேரை விடுங்கள்.
உங்கள் திரை வாழ்வின் மிக முக்கியமான இரண்டு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான், இரண்டு பேரையும் ஒரே புள்ளியில் இணைத்து ஒன்றாக ஒரே மேடையில் ஒரே கருத்தில் அவமானப்படுத்தி இருக்கிறீர்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.

உங்கள் புகழ், தமிழ் மொழி உள்ளளவும் அழிக்க முடியாத பெரும் புகழ்…

காலத்தின் பக்கங்களில் வரலாற்று அனுபவங்களை கண்ணியமாக வெளிப்படையாக “தான் மறந்து” உள்ளது உள்ளபடி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டிய நீங்கள்… இப்படி தப்பித வாக்குமூலம் அளிப்பது உங்கள் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் மரியாதையை மதிப்பை சிதைக்கும் என்பதால் சினிமாக்காரனாக சக பாடலாசிரியனாக எனக்கு இது வருத்தத்தை தருகிறது.

எனவே….

இப்போதும் எப்போதும் உங்கள் மொழி ஆளுமையை ரசித்து நேசிக்கும் ரசிகர்களில் ஒருவனாக…

ப்ரியங்களுடன்,
– முருகன் மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up