வசந்த மாளிகை – சில ஞாபகங்கள். பகிர்வு

வசந்த மாளிகை – சில ஞாபகங்கள். பகிர்வு

தமிழ் நாட்டில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரெளன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது.

மேலும், தஞ்சை, கோவை, சேலம், வேலூர், ஈரோடு, கடந்தை, மாயவரம் ஆகிய ஊர்களிலும் 100 நாட்களுக்கும் மேலும், மற்ற பல ஊர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. இது அந்த காலத்தில் மாபெரும் சாதனை.

இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ஆகிய நான்கு ஊர்களில் 1973 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மாயவரத்திலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக அடிக்கடி திரையிடப்படுவதும் வசூலில் மாபெரும் சாதனை படைப்பதுமாக இருந்து வருவது இந்த ஒரு படம் மட்டுமே.

ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழாப் படங்களை 1959, 1961 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மூன்றாவது முறையாக 2 வெள்ளி விழாப் படங்களை தந்தது.

‘வசந்த மாளிகை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் திடீரென்று காலமாகிப் போனார். இறுதிச் சடங்குகள் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டிலிருந்த சிவாஜி, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து நெஞ்சில் துக்கத்தை உண்டாக்குகிறது. எனவே படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் மனம் அமைதியாவது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கியிருக்கிறார். நடிகர் திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கம் என்ன இந்த மெளனமென்ன’ என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சி கவலையின் ரேகையே முகத்தில் தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார் அதுதான் சிவாஜி தொழில் வேறு, குடும்பம் வேறு என்று கடைசி வரை உறுதியாக இருந்தவர்.

இப்படத்திற்காக ‘அடியம்மா ராசாத்தி’ என்று தொடங்கும் ஒரு டூயட் பாடல் பாடமாக்கப்பட்டது. அது ரெக்கார்டு பிளேயார்களிலும் இடம்பெற்று வானொலிகளிலும் வெகுகாலம் ஒலிபரப்பாகி வந்தது ஆனால் திரைப்படத்தில் ஏனோ இடம் பெறவில்லை. முதன் முதலாக வண்ணத்தில் ‘ஸ்லோமோஷன்’ முறையில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘வசந்த மாளிகை’. இப்படி பல சிறப்புக்களையும் சாதனைகளையும் புரிந்த வசந்த மாளிகை இன்று டிஜிட்டல்மயமாகி 50வது நாள் ஓடுவது கோலிவுட்-டின் பெருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up